இருமொழி கொள்கை மூலம் நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
பாஜக-வின் கையெழுத்து இயக்கம் மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கியுள்ளது என்றும் தமிழ், தமிழென்று பேசிக்கொண்டு திமுக அரசு தமிழுக்கு எதையும் செய்யவில்லை என எல். முருகன் குற்றம்சாட்டினார்.
ஏழை மாணவர்கள் 3 மொழி படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் இருமொழி கொள்கை மூலம் நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடிக்கிறது என குற்றம்சாட்டினார்.
கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது என்றும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என எல். முருகன் குற்றம்சாட்டினார்.