கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உலக மகளிர் தினத்தையொட்டி உடற்பயிற்சி கூடத்தில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாமரைக்குட்டிவிளை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் உடல் வலிமையை பேணி காப்பதோடு பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற பெயருடன் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி அஜிலா, தனது கணவரைப் போன்று, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டு உலக மகளிர் தினத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.