திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் உண்ணாமுலை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.