உலக மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஏற்கனவே அறிவித்தபடி தமது சமூக ஊடக கணக்குகள் பெண்களால் கையாளப்படும் என அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், மகளிர் தினத்தை ஒட்டி, பெண் சக்தியை வணங்குவதாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வரும் நிலையில், ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, தமது சமூக ஊடக கணக்குகள் பெண்களால் கையாளப்படும் எனவும் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அதன்படி, பிரதமர் மோடியின் சமூக ஊடக கணக்குகளை தமிழக சதுரங்க வீராங்கனை வைஷாலி, அணு சக்தி விஞ்ஞானி எலினா மிஸ்ரா, விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனி ஆகியோர் கையாளுகின்றனர்.