உக்ரைன் மீது ரஷ்யா 34 ஏவுகணை மற்றும் டிரோன்களை ஏவியதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது.
இந்த சூழலில் இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு கூடிய விரைவில் முன்வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா 34 ஏவுகணை மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கு மேலை நாடுகள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.