ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 3 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
‘சமக்கல்வி எங்கள் உரிமை’ கையெழுத்து இயக்கத்திற்கு, நேரடியாகவும், இணைய வழியாகவும் பெருமளவில் ஆதரவளித்து வரும் தமிழக மக்கள் அனைவருக்கும் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
http://puthiyakalvi.in இணைய தளத்தின் வழியாக, மூன்றாவது நாளில் மூன்று லட்சம் கையெழுத்து என்ற இலக்கைக் கடந்து சென்று கொண்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நம் குழந்தைகள் அனைவருக்கும், அரசுப் பள்ளிகளிலேயே சிறப்பான, தரமான கல்வி, கிடைத்திட, தமிழக அரசுப் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நம் அனைவரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிட, உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.