இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருண் சக்கரவர்த்தி ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்று கூறினார்.
ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை சுட்டிக்காட்டிய அவர், லீக் சுற்றில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிப்போம் என தெரிவித்தார்.