ஜூனியர் உலக செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
மொண்டெனேகுரோ குடியரசில் ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் பங்கேற்று விளையாடினார்.
ஓபன் பிரிவில் மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவனியா வீரரை எதிர்கொண்ட அவர், 11-க்கு 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.