கர்நாடக மாநிலம் சனாப்பூர் ஏரிக்கரையில் இஸ்ரேல் பெண் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த பெண், அவர் தங்கியிருக்கும் விடுதி உரிமையாளர் மற்றும் ஆண் நண்பர்கள் என 5 பேர் கர்நாடக மாநிலம் ஹம்பி மாவட்டத்தில உள்ள சனாப்பூர் ஏரிக்கரையில் இரவு உணவு உட்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பைக்கில் வந்த இருவர், இஸ்ரேல் பெண்ணுடன் வந்திருந்த 3 ஆண்களையும் தாக்கி, கால்வாயில் தள்ளிவிட்டனர்.
பின்னர் இஸ்ரேல் பெண்ணையும், அவரது விடுதி உரிமையாளரையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் 6 தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.