சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இது தொடர்பாக கொல்கத்தாவில் பேட்டியளித்த சவுரவ் கங்குலி, இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்திய அணி நன்றாக விளையாடி கோப்பையை வெல்லும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.