டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை என்பது திமுக அரசு ஊழலில் ஊறி கொண்டிருப்பதன் வெளிப்பாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், காரமடை அரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பேட்டியளித்த அவர், மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என உணர்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
டாஸ்மாக் முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தயது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், திமுக அரசு ஊழலில் ஊறி கொண்டிருப்பதின் வெளிப்பாடே அமலாக்கத்துறை சோதனை எனக் கூறினார்.