சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து பட்டம் வென்றது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.
இதனால் இம்முறை நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகி வருகிறது. இதனையொட்டி ஆட்டத்தை நேரலையில் பார்ப்பதற்கு சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.