கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புதிய தேரின் வெள்ளோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகேயுள்ள கோவூரில் பிரசித்திபெற்ற சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் தேர் பழுதடைந்து 40 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கி நடைபெற்றது.
அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ அன்பரசன் வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.