பி.எம். ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்த தமிழக அரசு திடீரென தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டது ஏன், என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், பி.எம். ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு தயாராக இருந்ததாக தெரிவித்தார்.
ஆனால் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறுவது தவறானது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
அவரது உரையை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.