அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சுற்றித் திரிந்த நபரை, ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மார்ச் 8-ம் தேதி நள்ளிரவு ஒரு நபர் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அதனை கவனித்த பாதுகாப்பு பணியாளர்கள் அவரிடம் சென்றபோது, அவர்களை அந்த நபர் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனால் அந்த நபரை ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த நபர் அதிபர் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.