அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறது திமுக : எல். முருகன் குற்றச்சாட்டு
Aug 19, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறது திமுக : எல். முருகன் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Mar 10, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுப்பிய கேள்விகளுக்கு திமுகவினரிடம் பதில் இல்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர்.  மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் இன்று திமுகவினருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களை வஞ்சித்து திமுகவினர் செய்யும் கபட அரசியலை அவர் தோலுரித்துக்காட்டியுள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழியை கற்கும் வசதி உள்ள நிலையில் திமுக அரசு தங்கள் அரசியல் விளையாட்டுக்காக தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறது என்று எல். முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.

திமுகவினர் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மூன்று மொழியை கற்றுக் கொள்ள திமுகவினர் அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.

பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒப்புதல் தெரிவித்து விட்டு பின்னர் அரசியல் காரணங்களுக்காக யூடர்ன் அடித்ததையும் தர்மேந்திர பிரதான் அவர்கள் வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல திமுகவினரின் புளுகு மூட்டைகள் அம்பலபட்டு போனதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது திசைதிருப்பும் அரசியலை கையில் எடுத்துள்ளார் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவினரை பார்த்து கேள்வி எழுப்பினால் தமிழக மக்களை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவமானப்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடைமாற்றம் செய்கிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திமுகவினரிடம் பதில் இல்லை என தெரிவித்துள்ளார்.

பிஎம் ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை என்றும் அப்படி முன்வராத தன்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை எனக் கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன்? தமிழக மாணவர்களுக்கு நிதி தரவில்லை என பொத்தாம் பொதுவாக கூறுவதால் முதலமைச்சர் கூறுவது உண்மையாகி விடாது என கூறியுள்ளார்.

மும்மொழிக்கொள்கையை இந்தி திணிக்கப்படுவதாக கூறி திமுகவினர் செய்யும் வஞ்சக அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. தமிழக பாஜக நடத்தி வரும் #சமக்கல்வி_எங்கள்உரிமை கையெழுத்து இயக்கமே இதற்கு சாட்சி. லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்தி பூச்சாண்டி காட்டி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்று  எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK Stalinஎல்.முருகன்DMK is playing with the lives of government school students: L. Murugan allegestamil janamtv
ShareTweetSendShare
Previous Post

Chavaa திரைப்படம் எதிரொலி : முகலாய கோட்டையில் புதையல் தேடிய மக்கள்!

Next Post

டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு அளிக்க சென்ற பாஜகவினர் கைது!

Related News

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies