சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்கும் பொறுப்பை ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவிச்சினிடம் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஒப்படைத்தார்.
அப்போது உணர்ச்சிவயப்பட்ட அவர், கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்ததும், அதை நிர்வகித்ததும் மறக்க முடியாத நினைவு என தெரிவித்தார்.
அமெரிக்க விண்வெளி வீரர் பட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் அங்கேயே சிக்கிக்கொண்ட நிலையில், வரும் 16-ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புகிறார்.