காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதனால் காசாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனேவே காசா நகர கட்டமைப்பு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள் மற்றும் சூரிய பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கிடைத்துவந்த சொற்ப மின்சாரமும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மின்சார துண்டிப்பு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது.