மொழியை வைத்து திமுகவினர் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே தமிழக அரசுடன் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டதாகவும், தமிழக அரசு ஒத்துழைத்தால் பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதியை விடுவிக்க தயாராக இருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மேலும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தமிழ் வழியில்தான் கல்வி கற்பிக்கப்படும் என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை உதாரணமாக சுட்டிக்காட்டினார்.