ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஐ.பி.எல். தலைவர் அருண் சிங் துமாலுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், கிரிக்கெட் போட்டிகளின் போது மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.