அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் - நீதிமன்றம் கேள்வி!
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் – நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2025, 07:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ் தெரியாது எனில் அன்றாட பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தேனியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தான் மின் உற்பத்தி கழக அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காததாலும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாததால் தன்னை பணியில் இருந்து நிறுத்தி வைத்ததாக தெரிவித்திருந்தார்.

தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் எனவே மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுதாரரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தரப்பில், மனுதாரரின் தந்தை கப்பலில் வேலை பார்த்த நிலையில் அவர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை எனவும் தற்போது மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றதால் பணி வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ் தெரியாது எனில் அன்றாட பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில் பொது பணிக்கு ஏன் வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Tags: Tamil language test.tamil languagetnpscMadurai bench of the High CourtTamil Nadu government service
ShareTweetSendShare
Previous Post

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று வழி – நீதிமன்றத்தில் ஆவின் பதில்!

Next Post

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies