மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சியை தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் அந்நிறுவனத்தின் செயல்முறை ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து பேசிய தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கலைகோவன், AI தொழில்நுட்பத்துடன் ரோபோட்டிக்ஸ் உருவாக்கம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது மாணவர்களின் செய்முறை திறன் மேம்படும் எனத் தெரிவித்தார்.