திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் விஜயகுமார் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் கூடுதல் வட்டி கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் தரக்குறைவாக பேசுவதாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
வாங்கிய கடனை விட இரண்டு மடங்கு வட்டி செலுத்தியுள்ள தங்களை அதிமுக கிளை செயலாளர் விஜயகுமார் மிரட்டுவதாகவும், அவரிடமிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ள அவர்கள், விஜயகுமார் பறிமுதல் செய்து வைத்துள்ள தங்களின் லாரி மற்றும் ஜேசிபி வாகனங்களை மீட்டு தர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.