மாசிப் பெருந்திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கடம்பன்துறை பகுதியில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் ஒவ்வொரு நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இதே போல, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து காப்புக் கட்டிக்கொண்டனர்.