ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியல் சார்ந்த இயக்கம் அல்ல என தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை தவறாக புரிந்து கொள்வது எளிது என கூறியுள்ள அம்பத்தி ராயுடு அதை சரியாக புரிந்து கொள்வது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தேசத்தை வலிமைப்படுத்தும் புனித நோக்கத்திற்காக ABVP மாணவர்கள் உழைப்பதாக கூறியுள்ள அம்பத்தி ராயுடு, சாதிய பாகுபாட்டை ஒழிப்பது கடினம் என்றாலும், அனைவரும் சமம் என்பதை ABVP அமைப்பின் மூலம் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டு கலாச்சாரங்களின் ஆதிக்கத்தை விடுத்து நமது நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமென்றும் அம்பத்தி ராயுடு வலியுறுத்தியுள்ளார்.