அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் தடுக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திமுகவின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். கண்களைத் திறந்து பாருங்கள் முதலமைச்சரே. உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார் .