கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் அம்மாபேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆம்னி வேனில் வந்த நபர்கள் அவரை கடத்திச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மாணவி மீட்கப்பட்ட நிலையில், மாணவியை ஒருதலையாக காதலித்த இளைஞர் உட்பட கடத்தலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.