தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் வணங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக எம்.பிக்கள் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் உரையாற்றினார்.
அப்போது தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது எனக் கூறிய ஈ.வெ.ரா-வை திராவிட இயக்கத்தின் அடையாளம் என்று கூறுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், நாகரீகம், பெண்ணுரிமை என்று பேசும் திமுகவினர் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்ததாக குற்றம்சாட்டினார். இதுதான் திராவிட மாடலின் கலாச்சாரம் எனவும் அவர் விமர்சித்தார்.