புவனகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரம் மூட்டை நெற்பயிர்கள் சேதமடைந்தன.
கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டபோது ஆற்றங்கரை ஓரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டாம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், ஆற்றங்கரை ஓரத்திலேயே நெல் கொள்முதல் நிலையத்தை அரசு அமைத்தது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக ஆற்றங்கரை ஓரத்தில் கட்டப்பட்ட புதிய நெல் கொள்முதல் நிலையம் முழுவதும் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.