அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெஸ்லா காரை விலைக்கு வாங்கியுள்ளார்.
அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத்துறை தலைவராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் டெஸ்லா நிறுவன கிளைகள் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எலான் மஸ்குக்கு ஆதரவளிக்கும் விதமாக டெஸ்லா காரை தள்ளுபடி ஏதுமின்றி அதிபர் டொனால்ட் டிரம்ப் விலைக்கு வாங்கியுள்ளார்.
இதையொட்டி, பல்வேறு விதமான டெஸ்லா கார்களை வெள்ளை மாளிகைக்கே கொண்டுவந்து எலான் மஸ்க் காட்சிப்படுத்தினார்.