இந்தியா – மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அதன்படி, எல்லை கடந்த பரிவா்த்தனைகளில் உள்ளூா் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை நிறுவ இந்திய ரிசா்வ் வங்கி – மொரீஷியஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மொரீஷியஸ் அரசு – பாரத ஸ்டேட் வங்கி இடையே கடன் வசதி ஒப்பந்தமும், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
வெளியுறவுப் பணி பயிற்சி தொடா்பாக வெளியுறவு அமைச்சகங்கள் இடையிலான ஒப்பந்தமும், இந்திய அரசின் தேசிய நல்லாட்சி மையம் மற்றும் மொரீஷியஸ் பொதுச் சேவை – நிா்வாக சீா்திருத்த அமைச்சகம் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்திய கடற்படை- மொரீஷியஸ் அரசு இடையே தகவல் பகிா்வுக்கான தொழில்நுட்ப ரீதியிலான ஒப்பந்தம், இந்திய அமலாக்கத் துறை மற்றும் மொரீஷியஸ் நிதிக் குற்றங்கள் தடுப்பு ஆணையம் இடையிலான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் – மொரீஷியஸ் கடல்சாா் மண்டல நிா்வாகம் மற்றும் ஆய்வுத் துறை இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதனிடையே மொரீஷியஸ் நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.