தமிழகத்தில் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் தொகுதி திமுக உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் 250 சாலை மேம்பாலம், சாலை கீழ்ப்பாலம் பணிகள் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், 88 பணிகள் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்டவை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.