கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக சொக்கலிங்கம் கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், அவர் வ.உ.சி மைதானத்தில் உள்ள புங்கை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.