மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் தேங்கி நின்ற மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சுமார் மூன்று அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தை மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றனர்.