பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது.
அதன்படி சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார். சிறந்த வீராங்கனைக்கான விருதினை ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.