கொலம்பியா மற்றும் மொசாம்பிக்கை புரட்டி போட்ட கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொலம்பியாவில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பான இடங்களில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர்.
இதேபோல மொசாம்பிக்கில் பெய்த கனமழையால் தெருக்களில் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.