பாலியல் குற்றங்களை தடுக்க முதலமைச்சர் தவறிவிட்டதாக பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக உமாரதி ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பாரம்பரிய முறைப்படி பெண்களுக்கு வளையல் அணிவித்தும், மருதாணி வைத்தும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமாரதி ராஜன், பெண்கள் பாதுகாப்புடனும், சுயமாக நிற்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக கூறிய அவர், இதனை மறைப்பதற்காகவே பாஜகவினரை எப்படி கைது செய்யலாம் என முதலமைச்சர் சிந்திப்பதாகவும் கூறினார்.