இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளையராஜாவின் சிம்பொனி இசை லண்டனில் கடந்த 10-ம் தேதி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், பயணத்திற்கு வாழ்த்து கூறியதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இளையராஜா சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசை பயணத்தை அரசு சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.