டெல்லியில் நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025-க்கு டெல்லியில் நடைபெற்றது. முன்னதாக, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிரா முதலமைச்சர் பான்டாவிஸ் ஆகியோருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லி சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்ற இந்த அமர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தூதர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.
உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் படைப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதிலும், இந்தியாவை உலகளாவிய படைப்பாளர்களின் மையமாக மாற்றுவதிலும் #WAVES இன் பங்கு குறித்து விவாதித்தாக தெரிவித்தார்.