முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்த நிலையில், வழக்கானது நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக எதிர்காலத்தில் அவர் இதுபோன்று பேசாத வண்ணம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.