நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜே.பாலகொலா பொம்மன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சலை, அரக்காடு தேயிலை தோட்டத்திற்கு சென்றபோது சிறுத்தை தாக்கி பலியானார்.
இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் 10 இடங்களில் 20 தானியங்கி கேமராக்களை பொருத்தியும், கூண்டு வைத்தும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பள்ளிக் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.