கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழாவை ஒட்டி அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் மற்றும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஏற்றினர்.
2 நாட்களுக்கு இந்த திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.