தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை திருவான்மியூரில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தவெக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து, பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.