இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் 841 கோடி ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் உரையாற்றி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க பருத்தி சாகுபடி திட்டம் நடப்பாண்டிலும் 12 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் எனக் கூறினார்.
இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் 841 கோடி ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சந்தனம், செம்மரம் போன்ற மரங்களை வளர்ப்பது, பதிவு செய்வது தொடர்பாக வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
நெல் மற்றும் சிறுதானிய விதைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும், தென்னை சாகுபடியை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்திற்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.