சென்னை வானகரம் அருகே நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே வானகரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அங்கு, மேற்குவங்கத்தை சேர்ந்த லாபக் ஷேக் என்பவர் பணியாற்றி வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் ஒன்று கடித்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2 நாட்களுக்கு முன் அந்த நாய் இறந்துவிட்ட நிலையில், வடமாநில தொழிலாளியும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.