டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய நிலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 12 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் கொலரோடா ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் இருந்து டல்லாஸின் போர்ட் ஒர்த்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்றபோது விமான என்ஜினில் அதிர்வு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் விமான நிலையம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.
விமானத்தில் இருந்து 172 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். எனினும் 12 பயணிகள் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.