சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநில கல்வி உரிமை பாதுகாப்பு குறித்து சென்னை மாநில கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் அமைச்சர் கோவி.செழியன் உரையாற்றினார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.