காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் மாநிலம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அசாமின் தர்கான் பகுதியில் புதிய காவல்துறை அகாடமியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,
முந்தைய UPA ஆட்சிக்காலத்தில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட தற்போது நான்கு மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் அசாம் மாநிலம் செழிப்புடன் இருப்பதாகவும் கூறினார்.