குடியாத்தம் அரசு மருத்துவமனையின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியின்போது மண் சரிவில் சிக்கிக் கொண்ட கூலி தொழிலாளியை மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கம்பி கட்டும் பணியில் ஈடுபட்ட வினோத்குமார் என்ற கூலி தொழிலாளி மண் சரிவில் சிக்கிக் கொண்டார்.
இதனை கண்ட சக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் விரைந்து செயல்பட்டு மண்ணில் புதைந்த வினோத்குமாரை மீட்டனர். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வினோத்குமார் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மண் சரிவில் சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளியை மீட்கும் பதைபதைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.