தெலுங்கானா, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.